Amazon

Director Bharathiraja at STS 6th Educational AID Program


Director Bharathiraja at STS 6th Educational AID Program was held on 21nd Jun 2017 at ICF Higher Secondary School, Apprentices Ave, Ayanavaram, Chennai.

S2S (Service to Service) என்ற தன்னார்வ தொண்டு அமைப்பின் நிறுவனர் திரு.ரவி சொக்கலிங்கம் மற்றும் அமைப்பின் உறுப்பினர்கள் வருடம்தோறும் ஐ.சி.எப் உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச கல்வியுதவி மேற்கொண்டு வருகின்றனர்.
6ம் ஆண்டு நிறைவுதினமான நேற்று 82 மாணவர்களுக்குக் கல்வியுதவிற்கான இரண்டு லட்சத்து ஒன்பது ஆயிரத்து முன்னூறு (Rs.209300) ரூபாய் காசோலையை இயக்குனர் பாரதிராஜா ஐ.சி.எப் உயர்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு. பழனிவாசனிடம் அளித்தார். மேலும் இந்த ஆண்டின் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கும், சிறப்பாகப் பணியாற்றி ஆசிரியர்களுக்கும் பரிசுப் பொருள்களை வழங்கப்பட்டது.
“நான் 1977ம் ஆண்டு ஐ.சி.எப் உயர்நிலைப்பள்ளியில் எனது உயர்நிலைப் படிப்பை முடித்தேன். இந்தப் பள்ளியின் எனது பால்ய நண்பர்களுடனான நட்பை இன்று வரை தொடர்கிறேன்.
எல்லா மாணவர்களுக்கும் தனது இலக்கை அடைய முழுமனதுடன் முயற்சிக்க வேண்டும். எவராலும் எதையும் சாதிக்க முடியும். குடும்பத்தின் சூழ்நிலையைக் காரணமாகக் காட்டி படிப்பை நிறுத்தக்கூடாது. அப்படிப்பட்ட குழந்தைகளின் படிப்பிறகு உதவுவதற்காக உருவாக்கப்பட்டதே இந்த S2S (Service 2 Service) அமைப்பு” என்றார் S2S (Service 2 Service) அமைப்பின் நிறுவனர் திரு.ரவி சொக்கலிங்கம்
S2S அமைப்பு மென்மேலும் வளரவேண்டும், கல்வி அறிவு மிகவும் அத்தியவசிய ஒன்று – S2S (Service to Service) அமைப்பின் கல்வியுதவி விழாவில் இயக்குனர் பாரதிராஜா பேசியதாவது “உலகில் உள்ள தெய்வத்தை நமக்கு அறிமுகப்படுத்தியவர் தாய், நம்மைப் பாதுகாப்பவர் நமது தந்தை , தாயாகவும் தந்தையாகவும் நம்மை வழி நடத்துபவர்கள் ஆசிரியர்கள். அவர்களின் ஆலோசனைகளை மாணவர்கள் பின்பற்ற வேண்டும்.
பல இடங்களில் நமது கல்வி அறிவுதான் நமக்குச் சிறந்த பாதுகாவலனாய் அமையும், நான் இதைப் பல இடங்களில் உணர்ந்திருக்கிறேன்.
உலகில் மிகவும் கடினமான ஒன்று மனமார்ந்து மற்றவருக்கு உதவுவது. திரு. ரவி சொக்கலிங்கம் S2S (Service to Service) என்ற அமைப்பின் மூலம் 6வது வருடமாக அளிக்கும் உதவி பல மாணவர்களுக்கு இன்றியமையாததாக இருக்கும், அவரும் அவரது S2S அமைப்பும் மேன்மேலும் வளர்ந்து பல நல்லுதவிகளைச் செய்ய வேண்டும்” என்றார்.

Periyamayathevar Bharathiraja (born 17 July 1941) is an Indian film director who works mainly in the Tamil film industry. Making his debut in 1977 with 16 Vayathinile, he is known for realistic and sensitive portrayal of rural life in his films. As of 2017, he has won six National Film Awards, four Filmfare Awards South, two Tamil Nadu State Film Awards and a Nandi Award. He has also directed films in Telugu and Hindi. The Government of India honoured him with Padma Shri in 2004 for his contribution to the film industry.

Bharathiraja was born as Chinnasamy to Periyamayakallar and Karuthammal. He is married to Chandra Leelavathi and has two children Manoj Bharathiraja and Janani. Manoj is an actor who was introduced in Tajmahal, he is married to actress Nandana. Janani is married to Malaysian Rajkumar Thambiraja. Bharathiraja's brother-in-law Manojkumar has directed films like Mannukkul Vairam, Vandicholai Chinraasu, Vaanavil and Guru Paarvai. His brother Jayaraj has made his acting debut with Kaththukkutti. His relative Stalin is a television actor who acted in serials like Saravanan Meenatchi and 7C.

Comments

Popular Posts

Flipkart